உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வள்ளிமலை அதிசயம்!

வள்ளிமலை அதிசயம்!

திருமுருக கிருபானந்த வாரியாரின் தலைமையில் வள்ளிமலைக் கோயிலில் திருப்பணி நடந்தபோது படிக்கட்டுகளை புதிதாகக் கட்டினர். அப்போது பாதி மலையில் ஒருகல் மண்டபத்தை சீரமைக்க அதன் படிகளை அகற்றியபோது, உள்ளே இருந்து மட்டிப்பால் சாம்பிராணிப் புகை குபுகுபுவென்று வெளியேற, பணியாளர்கள் மயங்கினர். உடனே மற்றவர்கள் அங்கு சென்று பார்க்க, உள்ளே தவம் செய்யும் ஒரு முனிவரின் உருவம் மங்கலாகத் தெரிந்தது. அனைவரும் கன்னத்தில் போட்டுக் கொண்டு, அவரை வணங்கி, அகற்றப்பட்ட கற்களை அப்படியே வைத்து மூடிவிட்டு மற்ற திருப்பணிகளைச் செய்தனர். இன்றும் அந்தப் பழைய மண்டபத்தைக் காணலாம். இதுபோல் இன்னும் பல அதிசயங்கள் நிகழ்ந்த தலம் வள்ளிமலை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !