வசந்த உற்சவம்!
ADDED :3940 days ago
நெல்லை மாவட்டம், சிவசைலத்தில் உள்ள சிவசைலநாதர் கோயிலில் நடைபெறும் வசந்த உற்சவம் சிறப்பானது ஒரு பெண் புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்கு கணவனுடன் வந்து திரும்பும்போது சீர் கொடுத்து கண்ணீர் மல்க வழி அனுப்புவது நடக்குமே. அதுபோலவே, அன்னை பரமகல்யாணி ஈஸ்வரனுடன் பிறந்த ஊருக்கு வரும்போது ஆம்பூர் மக்கள் மகிழ்ச்சி பொங்க அவர்களைப் பல்லக்கில் அழைத்து வருவார்கள். அதன்பின் அன்று தனது அண்ணன் வீடான பெருமாள்கோயிலில் தங்கிவிட்டு மறுநாள் கிளம்புவார். அப்போது ஒவ்வொரு வீட்டிலும் பரமகல்யாணிக்கும் சிவசைலநாதருக்கும் வரவேற்பு அளிக்கப்படும். அவர்கள் திரும்பும்போது சீர்வகைகளைக் கொடுத்து, தங்க நகைகளால் அலங்கரித்து புகுந்தவீடான சிவசைலத்துக்கு கண்கலங்க அனுப்பி வைப்பார்கள். இந்தக் காட்சியைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல ஊர்களிலிருந்தும் வருவர்.