அனந்த பத்மநாப சுவாமி திருக்கோயில், ஹொச புதனூறு
ADDED :3940 days ago
சிறிய கோயில். தினசரி பூஜைகள் நடைபெறுகின்றன. நட்சத்திர வடிவ பீடம் மீது எழுப்பப்பட்டுள்ளது. நவரங்கா, சுகனாசி, கவறை என்ற ஏககூட அமைப்பில் கட்டப்பட்ட கோயில் 1250 ஆம் வருடம் கட்டப்பட்ட கோயில். அனந்த பத்மநாபர் என்ற திருநாமம் இருந்தாலும் நின்ற கோலத்தில் சங்கு சக்கரம் கதை பத்மம் தாங்கியே காட்சி தருகிறார் எம்பெருமான். காணத்திகட்டாத திருக்கோலம் நிம்மதியாக திவ்ய தரிசனம் செய்ய முடிகிறது. பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் வழியில் மாண்டியா என்ற ஊருக்கு 3 கி.மீ.க்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையின் வலதுபுறம் அமைந்துள்ளது இந்த சிறிய ஊர்.