உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கல்

பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கல்

மடத்துக்குளம்: பல்வேறு பகுதியிலிருந்து பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, தனியார் மில் நிர்வாகத்தினர் அன்னதானம் வழங்கினர். பழநிக்கு பல்வேறு பகுதியிலிருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் சென்று திரும்புகின்றனர். இவர்களுக்கு, மடத்துக்குளம் பகுதியிலுள்ள மக்கள், குடிநீர், டீ, காபி, சிறுதானிய உணவுகள், கூழ் மற்றும் சாப்பாடு ஆகியவை வழங்குவதோடு, பலவகையில் உதவுகின்றனர். இதில் ஒரு பகுதியாக, கேடிஎல் பகுதியிலிருந்து வேடபட்டி செல்லும் ரோட்டில் அமைந்துள்ள தனியார் பேப்பர்மில் நிர்வாகத்தினர், ஐந்து ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !