உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதகிரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் முளைக்கும் செடிகள்

வேதகிரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் முளைக்கும் செடிகள்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம், வேதகிரீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் முளைத்து
உள்ள செடிகளை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவிலின், தாழக்கோவிலின் ராஜகோபுரத்தின் நுழைவாயில் மேற்பகுதியில், செடிகள் முளைத்துள்ளன. இதனால், கோபுரம் உறுதி தன்மையை இழக்கும் வாய்ப்புள்ளது.எனவே, கோவில் கோபுரத்தை முறையாக பராமரித்து, அதில் முளைத்து வரும் செடிகளை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் கூறுகையில், கோபுரத்தில் வளரும் செடிகளை அழிக்க மருந்து உள்ளது. அதை பயன்படுத்தி செடிகளை அழிக்க உள்ளோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !