உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தாசலம் மாசி மக உற்சவம் துவக்கம்

விருத்தாசலம் மாசி மக உற்சவம் துவக்கம்

விருத்தாசலம்: ஆழத்து விநாயகர் கோவிலில் மாசி மக உற்சவம், கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.

இதையொட்டி, விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம், வெள்ளிக் கவசத்தில் தீபாராதனை நடந்தது. காலை 9:30க்கு மேல் 11:00 மணிக்குள் ஆழத்து விநாயகர், சண்முக சுப்ரமணியர் உற்சவர்கள் எழுந்தருளியதும், சன்னதி முன் உள்ள கொடி மரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இரவு சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார். தினசரி காலை, மாலை சிறப்பு அபிஷேகம், இரவு 7:00 மணியளவில் அலங்கரித்த வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. வரும் 10ம் தேதி நால்வருடன் சுவாமி வீதியுலா, பரிவேட்டை (வேடு பரி உற்சவம்), 11ம் தேதி முக்கிய நிகழ்வாக காலை 7:30க்கு மேல் 9:00 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !