உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்யாண கண்ணன் கோவில் கும்பாபிஷேகம்

கல்யாண கண்ணன் கோவில் கும்பாபிஷேகம்

கிள்ளை: கிள்ளை சரவணா நகர் கல்யாண கண்ணன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கிள்ளை சரவணா நகரில் அப்பகுதி இளைஞர்கள் கல்யாண கண்ணன் கோவிலை புதிதாக கட்டினர். இதற்கான கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 2ம் தேதி மாலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமங்களுடன், வாஸ்து சாந்தி, கடஸ் தாபனம், முதல் கால யாகசாலை, பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனையும், அன்று இரவு சுவாமி புறப்பாடும் நடந்தது.

கும்பாபிஷேக தினமான நேற்று (3ம் தேதி) காலை 5:00 மணி முதல் 7:30 மணிக்குள் இரண்டாம் கால யாகசாலை பூஜையும், பூர்ணாஹூதி தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து 9:00 மணியில் இருந்து 10:00 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடந்தது.  ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் செய்திருந்தனர். கிள்ளை சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !