தர்மசாஸ்தா கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :3537 days ago
கோபிசெட்டிபாளையம்: கோபி கூகலூர் அருகே தர்மசாஸ்தா கோவில் கும்பாபிஷேகம், பிப்.,19ல் நடக்கிறது. அன்று காலை, 5 மணிக்கு நான்காம் காலயாக பூஜை ஆரம்பம், தீபாராதனை, காலை, 6.30 மணிக்கு யாக சாலையில் யாத்ரா தானம், கலசங்கள் புறப்படுதல் நடக்கிறது. 7 முதல் 8 மணிக்கு கோபுர கலசம், பரிவார மூர்த்திகள், தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை, 8 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு தசதானம், தச தரிசனம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர்ப்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.