உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலகூடலுவில் மகா கும்பமேளா

திருமலகூடலுவில் மகா கும்பமேளா

மைசூரு: மைசூரு மாவட்டம், டி.நரசிபுரா திருமலகூடலுவில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும், 10வது மகா கும்பமேளா, வரும், 20ம் தேதி முதல், 22ம் தேதி வரை நடக்கிறது.

வட மாநிலத்தில் நடக்கும் கும்ப மேளாவில் கலந்து கொள்ள பலருக்கும் ஆர்வம் இருந்தாலும் சாத்தியமாவதில்லை. இதை மனதில் கொண்டு, காவிரி, கபிலா, ஸ்படிகா ஆகிய மூன்று நதிகள் இணையும் திருமலகூடலுவில், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, மகா கும்பமேளா நடத்தப்படுகிறது.

ஆலோசனை: மகா கும்பமேளா ஏற்பாடுகள் குறித்து, மைசூரு சாமுண்டிமலையின் அடிவாரத்தில் உள்ள, சுத்துார் மடத்தில், பல்வேறு மடாதிபதிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின், சுத்துார் மடத்தின் சிவராத்திரி தேசிகேந்திர சுவாமிகள், நிருபர் களிடம் கூறியதாவது: காவிரி, கபிலா, ஸ்படிகா ஆகிய மூன்று நதிகள் சங்கமமாகும், திருமகூடலு நரசிபுராவில், 10வது மகா கும்பமேளா, வரும், 20ம் தேதியில் இருந்து, 22ம் தேதி வரை, மூன்று நாட்கள் நடக்க உள்ளது. பிப்., 22ம் தேதி, புனித நீராட ஏற்பாடு செய்யப்படுகிறது. கும்பமேளாவில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். பிப்., 21ல் ஊர்வலம் ஆதிசுஞ்சனகிரி மடத்தின் பாலகங்காதார நாத சுவாமிகள், கைலாச ஆஸ்ரமத்தின் திருச்சி சுவாமிகள் என, பல மடாதிபதிகளின் ஆசியில் மகா கும்பமேளா நடக்கிறது. இம்முறை நடக்கும் கும்பமேளாவில், தென் மற்றும் வட மாநிலங்களில் இருந்து, நுாற்றுக்கணக்கான சன்னியாசிகள் பங்கேற்கின்றனர். பிப்., 21ல்,சன்னியாசிகளின் ஊர்வலம் நடக்கவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !