உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்லபுரம் நாட்டிய விழா: இன்று கலை நிகழ்ச்சியுடன் நிறைவு

மாமல்லபுரம் நாட்டிய விழா: இன்று கலை நிகழ்ச்சியுடன் நிறைவு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் நாட்டிய விழா, இன்று நிறைவடைகிறது.சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில், பாரம்பரிய கலைச்சின்னங்களை காண வரும், சர்வதேச சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க, தமிழக சுற்றுலா துறை சார்பில், ஆண்டுதோறும் இந்திய நாட்டிய விழா நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழா, கடந்த மாதம், 5ம் தேதி துவக்கப்பட்டு, தினமும் மாலை, 5:30 மணி முதல், இரவு 8:00 மணி வரை, பரத நாட்டியம், கதகளி, குச்சிப்புடி, ஒடிசி உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நடனங்கள், கரகம், காவடி, தப்பாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் ஆகியவை இடம் பெற்றன.இவ்விழா, இன்று மாலை, பரத நாட்டியம் மற்றும் ஒடிசா கிராமிய கலை நிகழ்ச்சி ஆகியவற்றுடன் நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !