கோவில் திருப்பணிக்கு நிதியுதவி வழங்கல்
ADDED :3541 days ago
புதுச்சேரி: ரோஜா நகரில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் திருப்பணிக்கு, தி.மு.க., பிரமுகர் வீரராகு நன்கொடை வழங்கினார். அரும்பார்த்தபுரம் ரோஜா நகரில், ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக் கோவில் திருப்பணிக்கு, உழவர்கரை தொகுதி தி.மு.க., சார்பில் மாநில இளைஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் வீரராகு, திருப்பணி கமிட்டி நிர்வாகிகளிடம் ரூ.50 ஆயிரம் நன்கொடை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அறங்காவலர் குழுவினர் கோபாலகிருஷ்ணன், பிரபாதேவி, தி.மு.க., பிரமுகர்கள் மதியழகன், பாபு, ரமேஷ் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.