உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை நல்லாம்பளையத்தில் மாதா அமிர்தானந்தமயி பிப்., 13ல் தரிசனம்

கோவை நல்லாம்பளையத்தில் மாதா அமிர்தானந்தமயி பிப்., 13ல் தரிசனம்

கோவை : கோவை நல்லாம்பளையத்தில் உள்ள அமிர்த வித்யாலயம் பள்ளிக்கு, அமிர்தானந்தமயி வருகிறார். இரண்டு நாட்கள் தங்கி, பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார். பிப்.,13 மற்றும் 14ம் தேதிகளில் காலை, 10:00 மணிக்கு, சத்சங்கம், பஜனை, தியானம் மற்றும் தரிசன நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தரிசனம் பெற விரும்புபவர்கள், அதற்குரிய இலவச தரிசன டோக்கன் விழா பந்தலில் பெற்றுக்கொள்ளலாம். இரண்டு நாட்களும் பிரம்மஸ்தான ஆலையத்தில் சிறப்பு பூஜைகள், தோஷ நிவாரண பூஜைகள் மற்றும் அன்னதான நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !