உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாணவர்கள் தேர்ச்சி பெற ஹயக்கிரீவர் கோவிலில் வழிபாடு!

மாணவர்கள் தேர்ச்சி பெற ஹயக்கிரீவர் கோவிலில் வழிபாடு!

செங்கல்பட்டு: செட்டிப்புண்ணியத்தில், பொதுத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற, யோக ஹயக்கிரீவர் கோவிலில், நேற்று, அபிவிருத்தி சங்கல்ப  வழிபாடு நடைபெற்றது. செங்கல்பட்டு அடுத்த, செட்டிப்புண்ணியம் கிராமத்தில் தேவநாத சுவாமி கோவிலில், கல்விக் கடவுளாக விளங்கும், யோக  ஹயக்கிரீவர் பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.  இக்கோவில், இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், பள்ளி,  கல்லூரி மாணவர்கள் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற, யோக ஹயக்கிரீவர் வித்யா அபிவிருத்தி சங்கல்ப சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்த  ஆண்டு, புதிதாக கட்டிய வசந்த மண்டபத்தில், யோக ஹயக்கிரீவருக்கு சிறப்பு வித்யா அபிவிருத்தி சங்கல்ப அர்ச்சனை (மாணவ, மாணவியர் ÷ தர்வில் வெற்றி பெறவும், அதிக மதிப்பெண்கள் பெறவும்) நேற்று, நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் இன்றி, சென்னை உட்பட பல்வேறு இட ங்களிலிருந்து ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு, சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !