சவுந்தரராஜப் பெருமாள் முத்துப் பல்லக்கில் உலா!
ADDED :5224 days ago
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில், வசந்தம் முத்துப்பல்லக்கில் சுவாமி, இரவு முழுவதும் நகர்வலம் வந்தார். கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில், நாள்தோறும் சுவாமி புறப்பாடு, கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன. இன்று இரவுடன் விழா நிறைவடைகிறது. வசந்தம் முத்துப்பல்லக்கு நேற்று முன்தினம் இரவு நடந்தது. சன்னதியில் இருந்து இரவு 10.35 மணிக்கு சுவாமி முத்துபல்லக்கில் புறப்பட்டு, இரவு முழுவதும் நகரை வலம் வந்து அருள்பாலித்தார். பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டனர். நேற்று அதிகாலை, சுவாமி சன்னதிக்கு திரும்பினார்.