உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

திரவுபதியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

புதுச்சேரி: முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை (10ம் தேதி)  நடக்கிறது. முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் ÷ காவில் கும்பாபிஷேக விழா கடந்த 24ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று காலை 7:00 மணிக்கு மகா கணபதி வேள்வி,  நவக்கிரக ஹோமம், கோ பூஜை, தன பூஜை, லட்சுமி பூஜை நடந்தது. மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, மிருத சங்கரஹணம் (மண் ஏற்றுக்  கொள்ளுதல்), அங்குரார்ப்பணம் (நவதானியங்களை மண்ணிட்டு வளர்த்தல்) காப்பு கட்டுதல், யாகசாலை நுழைவு, முதல் கால வேள்வி வழிபாடு  நடந்தது. இன்று காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், மாலை 5:30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, அஷ்டபந்தனம் சாத்துதல்  நடக்கிறது. நாளை (10ம் தேதி) காலை 5:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, பதினாறு வகை வழிபாடும், காலை 9:00 மணிக்கு திருக்குடங்கள்  புறப்பாடு, 9:10 விநாயகருக்கும், 10:05 மணிக்கு திரவுபதியம்மன், வரதராஜபெருமாள், பரிவார விமானங்களுக்கு கும்பாபிஷேகமும்,  அதைத்தொடர்ந்து முருகர், வள்ளி தெய்வானை, கெங்கையம்மன், முத்தால்ராயர், போர்மன்னர், கொடிமரம், கருடாழ்வார், ஆஞ்சநேயர், துர்க்கை  அம்மன், நவக்கிரகங்களுக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !