உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை ஐயப்பன் கோவில் சம்பிரதாயம் கோர்ட் தலையிட எம்.பி., எதிர்ப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவில் சம்பிரதாயம் கோர்ட் தலையிட எம்.பி., எதிர்ப்பு!

புதுடில்லி: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் சம்பிரதாயங்களில் சுப்ரீம் கோர்ட் தலையிடுவது ஏற்கத்தக்கதல்ல, என, கர்நாடகாவை சேர்ந்த, ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த, 22 ஆண்டுகளாக சபரி மலைக்கு சென்று வருகிறேன். அக்கோவிலின் பாரம்பரியம், சம்பிரதாயங்கள் நன்கு தெரியும். சில பழக்க வழக்கங்களை, பல ஆண்டுகளாக பின்பற்றி வருகிறோம். இது, ஹிந்துக்களின் நம்பிக்கை சார்ந்தது. அதை, சுப்ரீம் கோர்ட் மதிக்க வேண்டும். ஹிந்துக்களின் சம்பிரதாயங்களில் தலையிடுவது சரியல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !