உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொதுநல சிந்தனை உண்டாக என்ன செய்யவேண்டும்?

பொதுநல சிந்தனை உண்டாக என்ன செய்யவேண்டும்?

முதலில் நான் என்பது உயிரையா அல்லது உடலையா இவற்றில் எதைக் குறிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உயிர் இருந்தால் தான் உடலுக்கு மனிதன் என்னும் மதிப்பு உண்டாகிறது. உடல் இல்லாவிட்டால் உயிரும் தனித்துச் செயல்பட முடியாது. பொதுவாக மனிதர்களுக்கு உடல் சம்பந்தப்பட்ட சுகபோகம், பதவி, புகழ், பணம் என்ற சிந்தனை மேலோங்கி வாழ்வதால் நான் என்னும் அகந்தை ஏற்படுகிறது. உயிர் என்பது அழியாதது. செய்யும் பாவபுண்ணிய அடிப்படையில் மீண்டும் பிறக்கக் கூடியது. இந்த உயிருக்கு புண்ணிய பலம் அதிகமாக வேண்டும். அப்போது இந்த பிறவியில் இன்பமாக வாழ்ந்தும் மறுபிறவி இல்லாத பேரின்பம் கிடைக்கும். இதை புரிந்து கொண்டால் அகந்தை நீங்கி பொதுநலம் மேலோங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !