உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தச தீர்த்தங்களில் சிதம்பரம் நடராஜர் தீர்த்தவாரி!

தச தீர்த்தங்களில் சிதம்பரம் நடராஜர் தீர்த்தவாரி!

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர், தச தீர்த்தங்களில் தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்தது. சிதம்பரம் நடராஜரின் பிரதிநிதியாக சந்திரசேகரசுவாமி நடராஜர் கோவிலில் இருந்து தச தீர்த்தங்களில் தீர்த்தவாரி உற்சவத்தை முன்னிட்டு கடந்த 7 ம் தேதி இரவு சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி  நடந்தது.  மறுநாள் 8 ம் தேதி காலை அலங்கரிப்பட்ட பல்லக்கில் பக்தர்கள் துாக்கிச் சென்று முதல் கட்டமாக கோவிலில் உள்ள சிவகங்கையில்  தீர்தவாரிக்குப் பின் கிள்ளைக்கு எழுந்தருளள் நிகழ்சியுடன் தச தீர்த்தங்களில் தீர்த்தவாரி நடந்தது.  இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் சிவத்தொண்டர்கள்  பலர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !