உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமணத்தில் அட்சதை துõவுவது ஏன்?

திருமணத்தில் அட்சதை துõவுவது ஏன்?

மணமக்களை பெரியவர்கள் அட்சதை துõவி வாழ்த்துவர். அட்சதை என்றால் முனை முறியாத பழுதுபடாத அரிசி என்பது பொருள். அட்சதைக்கு பயன்படுத்தும் அரிசி குருணையாக இருக்கக் கூடாது. முழுமையாகவும், மஞ்சள் சேர்க்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். அட்சதையை திருவிளக்கின் முன் வைத்து பூஜித்த பின்னரே பயன்படுத்த வேண்டும். இதிலுள்ள ஒவ்வொரு அரிசியும் பூவுக்குச் சமமானது என்பதால், அன்றாட பூஜையில் சுவாமிக்கு அர்ச்சிக்கவும் பயன்படுத்தலாம். அட்சதை என்பதற்கு பழுது படாத அரிசி என்றும் பொருள் உண்டு. மண வாழ்வில் ஈடுபடும் தம்பதியரின் வாழ்வு பழுது இல்லாமல் முழுமையானதாக அமைய வேண்டும் என்பதே அட்சதை துõவி வாழ்த்துவதன் நோக்கமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !