உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீ பாதி! நான் பாதி!

நீ பாதி! நான் பாதி!

பிரம்மாவின் நாவில் சரஸ்வதி குடியிருக்கிறாள். விஷ்ணுவின் மார்பில் லட்சுமி வாசம் செய்கிறாள். சிவன் தன் இடப்பாகத்தையே பார்வதிக்கு கொடுத்திருக்கிறார். பெண் தெய்வங்களின் இருப்பிடத்தைப் புராணங்கள் இப்படி ஒவ்வொரு விதமாகக் கூறுகின்றன. இவை உணர்த்தும் உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள். படித்தவன் நேர்மை யானவனாக இருக்க வேண்டும். சரஸ்வதி நாக்கில் குடியிருக்க வேண்டுமானால் உண்மையை மட்டும் பேச வேண்டும். பணம் படைத்தவர்களின் நெஞ்சில் கருணையும், ஈரமும் இருக்க வேண்டும். தன்னால் முடிந்த நன்மையைச் செய்ய வேண்டும். சிவன் தன் உடம்பில் சரிபாதியை தேவிக்கு கொடுத்திருப்பது போல் குடும்பத்தில் கணவனும், மனைவியும் சமத்துவமாக வாழ வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !