திருமணத்தடை நீங்க அம்பிகை வழிபாடு!
ADDED :3927 days ago
திருமண வயதை அடைந்தும், அந்த பாக்கியம் கிடைக்காமல் தவிப்போர் எண்ணிக்கை இன்று அதிக அளவில் உள்ளது. இப்படிப்பட்டவர்கள், வெள்ளிக்கிழமைகளில் வரும் பவுர்ணமி அன்று அம்பிகைக்கு பொன்னிற ஆடை அணிவித்து, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சித்து, மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், சந்தனம், கற்கண்டு, பொங்கல், ஆகியவற்றை நிவேதனமாக செய்து வழிபட்டால் அவர்களது திருமணத்தடை அகன்று விடும். வராத வரனும் வீடு தேடி வரும். கூடிய விரைவில் வீட்டில் கெட்டி மேளம் கொட்டும். பிரிந்து வாழும் தம்பதியரும் அந்த பூஜை செய்யலாம். அப்படிச் செய்தால் அவர்கள் மீண்டும் இணைந்து இனிமையான இல்லற வாழ்க்கை வாழலாம்.