மூன்று வகை பக்திகள் எவை?
ADDED :3927 days ago
மனம், வாக்கு, உடல் - இவற்றால் இறைவனை வழிபடுவதே பக்தி. இறைவனையும், அவனது பெருமைகளையும் சிந்திப்பது மனதால் செய்யும் பக்தி. இறைவனின் திருப்புகழை வாயாரப் பாடுவது வாக்கினால் செய்யும் பக்தி. கோயிலை வலம் வருவதும், தொண்டுகள் செய்வதும் உடலால் செய்யும் பக்தி.