மாசி நீராடல் பலன் என்ன?
ADDED :3927 days ago
மகம் நட்சத்திரத்தின் ஈர்ப்புத்தன்மை காரணமாக மாசி மகத்தில் பூமியில் காந்த சக்தி அதிகரித்து, அதனால் நீர் நிலைகளில் புதிய நீருற்றுகள் உண்டாகி அவற்றிலும் காந்த சக்தி நிறைந்திருக்கும். அதனால் தான், மாசி மாதத்தில் நதிகளில் நீராடுவது உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியம் தரும் என்கிறார்கள். இந்த மாதத்தில் எந்த நீர்நிலையில் புனித நீராடினாலும் பிரயாகை, கங்கை, நர்மதை, காவேரி, கோதாவரி, தாமிரபரணி, போன்ற 24 கோடி தீர்த்தங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகள் நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.