உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெய்குளத்தில் தெரியும் லலிதாம்பிகை அம்மன்!

நெய்குளத்தில் தெரியும் லலிதாம்பிகை அம்மன்!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள திருமியச்சூர் ஸ்ரீலலிதாம்பிகை கோயிலில் விஜயதசமி அன்று லலிதாம்பிகைக்கு சர்க்கரைப் பொங்கல், புளி சாதம், தயிர் சாதம் படையலாக படைக்கப்படுகிறது. வாழை இலையில் 15 அடி நீளம், 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைக்கப்படும் சர்க்கரைப் பொங்கலில் இரண்டு டின் நெய் குளம் போல் ஊற்றப்படுகிறது. அம்மன் அலங்காரம் முடிந்து திரை விலக்கப்படும்போது, அன்னையின் உருவம் பொங்கலின் நெய்க் குளத்தில் தெரியும் இதைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இங்கு பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேறினால் அம்மனுக்கு கொலுசு காணிக்கை செலுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !