108 குட பால் அபிஷேகம்
ADDED :3681 days ago
புதுச்சேரி: சின்னக்கோட்டக்குப்பம், ஆலடியம்மன் கோவிலில், 108 குட பால் அபிஷேகம் நடந்தது.
சின்னக்கோட்டக்குப்பம், பெருமாள் முதலியார் தோட்டத்தில் அமைந்துள்ள ஆலடியம்மன் கோவிலில், தை அமாவாசையை முன்னிட்டு, 108 பால் குட அபிஷேகம் நடந்தது. பின், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.