உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரெணபலி முருகன் கோயிலில் மாசி மகம் நாளை துவக்கம்

ரெணபலி முருகன் கோயிலில் மாசி மகம் நாளை துவக்கம்

ராமநாதபுரம்: பெருவயல் ரெணபலி முருகன் கோயிலில் மாசி மகம் திருவிழா நாளை (பிப்., 12) காலை 9 மணிக்கு காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது.

தொடர்ந்து காலை 10 மணிக்கு தேங்காய் தொடல் நிகழ்ச்சி நடக்கிறது. பிப்., 13 முதல் பிப்., 18வரை அன்னம், மேஷம், பூசி, கைலாசம், யானை, மயில் வாகனங்களில் சுவாமி தினமும் காலை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிப்., 19 சண்முகர் உற்சவம், பிப்., 20ல் குதிரை, பிப்., 21ல் புஷ்பம், பிப்., 22ல் கேடய வாகனங்களில் அருள்பாலிக்கிறார். அன்று காலை 10.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. பிப்., 23ல் தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாத புரம் சமஸ்தானம் தேவஸ் தானம் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !