உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சத்திரம் முனியனார் கோவிலில் லட்சதீப விழா

புதுச்சத்திரம் முனியனார் கோவிலில் லட்சதீப விழா

புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை முனியனார் கோவிலில் 70வது ஆண்டு லட்சதீப திருவிழா நடந்தது.

புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளை முனியனார் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை லட்சதீப திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 70வது ஆண்டு லட்சதீப திருவிழா கடந்த 8ம் தேதி காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
முக்கிய விழாவான லட்சதீப திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. அதனையொட்டி காலை 10:00 மணிக்கு முனியனார், நல்லநாயகி, பொன்னியம்மன், விநாயகர், ஐயனார் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு அலங்கார  காவடி புறப்பாடு செய்து, 6:00 மணிக்கு லட்சதீப திருவிழாவும், இரவு 9:00 மணிக்கு நாடகம் நடந்தது.  இதில் சுற்றுப் பகுதிகளைச் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !