வேதபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்
ADDED :3780 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் உள்ள பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம், கடந்த, 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும் விழாவில், 6ம் நாளான நேற்று முன்தினம் இரவு, அம்மன் திருக்கல்யாணமும், யானை வாகன சேவையும் நடந்தது. இதையடுத்து, நேற்று காலை ரத சப்தமியையொட்டி முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. தேரில் சுவாமி, அம்மன் அலங்கரிக்கப்பட்டு, மாட வீதியில் உலா வந்தனர். அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். அப்போது, வழி நெடுகிலும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தி வழிபட்டனர்.