பங்காரு அடிகளார் பவள விழா பூஜை
ADDED :3667 days ago
கரூர்: கரூர் ராமானுஜநகர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க சார்பில், மேல்மருவத்தூர் பங்காரு
அடிகளார், 75ம் ஆண்டு நிறைவு பவளவிழாவை முன்னிட்டு கலச விளக்கு, வேள்விபூஜை
நடந்தது. இதில், இயற்கை வளங்கள் செழிக்கவும், மழைவளம், விவசாயம் தழைக்கவும்,
தொழில்வளம், மக்கள் அமைதி பெற்று நல்வாழ்வுவேண்டி மகா குண்டத்தின் அக்னியில் இருந்து ஆன்மீக ஜோதி ஏற்றப்பட்டது. இந்த ஜோதி கரூர் மாவட்டத்தில் உள்ள செவ்வாடைத்
தொண்டர்கள், பக்தர்கள் இல்லங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு பூஜை செய்து, வரும், 29ம் தேதி
மேல்மருவத்தூர் சென்றடைகிறது. அங்கு அடிகளாரின் அவதார திருநாள் வேள்வியினை இந்த ஜோதியைக் கொண்டு ஏற்றப்படும். பூஜையில், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.