உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீதையை ஒப்பிக்கும் கண் பார்வையற்ற முஸ்லிம் சிறுமி!

கீதையை ஒப்பிக்கும் கண் பார்வையற்ற முஸ்லிம் சிறுமி!

லக்னோ: ஹிந்துக்களின் புனித நுாலான பகவத் கீதையில் உள்ள, அனைத்து ஸ்லோகங்களையும் நினைவில் வைத்துக் கொள்வது, பெரியவர்களுக்கே சவாலாக இருக்கும் நிலையில், கண் பார்வையற்ற, 7 வயது முஸ்லிம் சிறுமி, தங்கு தடையின்றி கூறுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. உ.பி., மாநிலம், லோஹியா நகரில் வசிக்கும், ரயீஸ் ஹைதரின் மகள் ரிதா ஜெஹ்ரா, 7. கண் பார்வையை இழந்த ரிதா, மீரட்டில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில், 3ம் வகுப்பு படிக்கிறார். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், பகவத் கீதை போட்டியில் ரிதாவை பங்கேற்க செய்ய விரும்பினார். இதற்காக ரிதாவுக்கு, பகவத் கீதையை கற்றுக் கொடுத்தார். தற்போது அவர், கீதையின் எந்த ஸ்லோகத்தை கேட்டாலும் அதை மனப்பாடமாக கூறுகிறார். ரிதாவின் இந்த திறமையை பார்த்து, ஆசிரியர்களும் மற்றவர்களும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !