உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் மாரியம்மன் கோயில் தீர்த்தம் அழைத்தல் விழா!

நத்தம் மாரியம்மன் கோயில் தீர்த்தம் அழைத்தல் விழா!

நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயிலில், நடப்பு ஆண்டு திருவிழா பிப்.,15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.  நேற்று, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், கரந்தமலை கன்னிமார் கோயிலில் தீர்த்தம் எடுத்துக்கொண்டு, சந்தனக்கருப்பு கோயில் வழியாக, மாரியம்மான் கோவிலை சென்றடைந்தனர்.  அங்கு, காப்புக்கட்டி விரதம் துவக்கினர். கரந்தமலைக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது. மார்ச் 1ல் பூக்குளி இறங்குதலும், கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் குழு மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !