உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியாம்பட்டி வீரபத்திரசுவாமி கோவில் விழா

பெரியாம்பட்டி வீரபத்திரசுவாமி கோவில் விழா

தர்மபுரி : தர்மபுரியை அடுத்த பெரியாம்பட்டி பூலாம்பட்டி ஆற்றங்கரையில் உள்ள குருமன்ஸ் இன மக்களின் குல தெய்வமான ஸ்ரீவீரபத்திர சுவாமி மற்றும் ஸ்ரீ சித்தப்ப சுவாமி கோவில் விழா நடந்தது. இதையொட்டி கடந்த 12ம் தேதி அதிகாலை 4 மணிக்கு புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ சித்தப்ப சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. காலை 7 மணிக்கு கங்கனம் கட்டுதல் நடந்தது. நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு முருக்கம்பட்டியில் இருந்து சித்தப்ப சுவாமி அலங்கரித்து பூஜைகள் நடந்தது. மாலை 5 மணிக்கு முருக்கம்பட்டியில் இருந்து ஸ்வாமி பூலாப்பட்டி காட்டு கோவிலுக்கு சென்றடைந்தது. இரவு 8 மணிக்கு சேவாட்டம், 10 மணிக்கு வான வேடிக்கை நடந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு சித்தப்ப சுவாமிக்கு கங்கை பூஜையும், சுவாமி அலங்கரித்தலும் நடந்தது. காலை 9 மணிக்கு பக்தர்கள் தலைமீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துதலும், குழந்தைகளுக்கு பெயர் சூட்டுதல், தலைமுடி வாங்குதல் ஆகியவை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், தர்மகர்த்தாக்கள் உதவி தர்மகர்த்தா, பூசாரிகள் சித்தன், சின்னசாமி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !