உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் 21ல் மாசி தேரோட்டம்

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் 21ல் மாசி தேரோட்டம்

மேச்சேரி: மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில், வரும், 20ம் தேதி அதிகாலை
கொடியேற்றத்துடன் மாசி தேரோட்டம் துவங்குகிறது. 21 மதியம், 3.30 மணிக்கு சிறிய தேர் வீதி
உலா நடக்கிறது. 22ம் தேதி, பெரிய தேர் வீதி உலா துவங்கி, 23 மற்றும் 24ம் தேதி நிலையை
அடைகிறது. 26ம் தேதி சத்தாபரணம், 28ம் தேதி மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. மேச்சேரி
பத்ரகாளியம்மன் கோவில் மாசி தேரோட்டத்தை முன்னிட்டு சப்-கலெக்டர் மேகநாதரெட்டி
தலைமையில், பல்துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் மேட்டூரில் இன்று
(பிப்.,17) நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !