மகாமக குளம் தீர்த்த நீராட்ட பலன்!
மகாமக குளத்திற்குள் 19 தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் நீராடுவதால் ஏற்படும் பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
1. வாயு தீர்த்தம் - நோய் நீங்குதல்
2. கங்கை தீர்த்தம் - அமைதியான மரணம்
3. பிரம்ம தீர்த்தம் - முன்னோர்களின் பாவம் தொலைதல்
4. யமுனை தீர்த்தம் - தங்க நகைகள் சேருதல்
5. குபேர தீர்த்தம் - சகல செல்வ விருத்தி
6. கோதாவரி தீர்த்தம் - விரும்பியது நடத்தல்
7. ஈசான்ய தீர்த்தம் - அவதிப்படுவோர் சிவனடி சேர்தல்
8. நர்மதை தீர்த்தம் - தேகபலம் உண்டாகுதல்
9. இந்திர தீர்த்தம் - பூலோகத்தில் சொர்க்க வாழ்வு
10. சரஸ்வதி தீர்த்தம் - கல்வி விருத்தி
11. அக்னி தீர்த்தம் - பிரம்மஹத்தி (கொலை) தோஷம் நீக்கம்
12. காவிரி தீர்த்தம் - குழந்தை பாக்கியம்
13. யமன் தீர்த்தம் - எமபயம் நீங்குதல்
14. குமரி தீர்த்தம் - அஸ்வமேத யாக பலன்
15. நிருதி தீர்த்தம் - திருஷ்டி, பயம் விலகுதல்
16. பயோடினி தீர்த்தம் - குடும்ப ஒற்றுமை
17. தேவ தீர்த்தம் - ஆயுள்விருத்தி
18. வருண தீர்த்தம் - மழைவளம் செழித்தல்
19. சரயு தீர்த்தம் - மனநிம்மதி.