உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தைகளே! இது உங்களுக்கான விஷயம்

குழந்தைகளே! இது உங்களுக்கான விஷயம்

நாம் இந்த உலகில் செல்வச்செழிப்புடனும், புகழுடனும் நடமாட காரணமானவர்களே பெற்றோர் தான். சில பிள்ளைகள் பெற்றோர் சொல் கேளாமல், அவர்கள் சம்பாதித்து தந்ததை தீமை தரும் பொழுது போக்குகளில் செலவிட்டு, பெற்றவர்களைப் பழிப்பார்கள். மேலும் சிலர் நன்றி மறந்து தங்களை ஆளாக்கிய பெற்றோருக்கு ஒரு வேளை கஞ்சி கூட தராமல் கொடுமை செய்வார்கள். பெற்றோரைக் கொடுமை செய்யும் பிள்ளைகள் குறித்து நிறையவே நாம் படிக்கிறோம். பெற்றோரைக் கொடுமை செய்யும் பிள்ளைகள், பைபிளைப் படித்திருந்தால் இப்படி செய்திருப்பார்களா? உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக, என்பதும், உன்னைப் பெற்ற தகப்பனுக்கு செவிகொடு, உன் தாய் வயது சென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே, என்பதும் அதிலுள்ள வசனங்கள். பெற்றோரை மதிக்காமல் அகால மரணம் அடைவதை விட, அவர்களை மதித்து ஆயுளை அதிகரித்துக் கொள்வதுடன், ஆண்டவரின் ஆசிர்வாதத்தையும் பெறுவோம். நம் அன்புக்குழந்தைகளுக்கு இந்த வசனங்களை கற்றுத்தந்து, இளமையிலேயே பெற்றோரைக் காப்பாற்றும் நல்லெண்ண விதையை ஊன்றுவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !