உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தவறை தடுக்க மூன்று வழி!

தவறை தடுக்க மூன்று வழி!

நம் கண்முன்னால் இன்று எத்தனையோ தவறுகள் நடக்கின்றன. இவற்றைத் தடுத்து நிறுத்துவது நம் கடமை. தவறு செய்வோரைத் திருத்த முயற்சிக்கும் போது, அவர்கள் நம்மை தாக்க வரலாம். எனவே சந்தர்ப்ப சூழ்நிலையை அனுசரித்து, தவறு செய்பவர்களைத் திருத்த முடியும் என்கிறார் நபிகள்நாயகம். இதோ அவரது கருத்து. உங்களில் யாராவது ஒருவர் ஒரு தவறைக் கண்டால் அதைத் தமது கரத்தால் மாற்றட்டும். அது இயலாவிட்டால் தமது நாவால் மாற்றட்டும். அதுவும் இயலாவிட்டால் உள்ளத்தால் வெறுத்து விலகி விடட்டும், என்கிறார். தவறு செய்வதை நம் கரத்தால் தடுத்து நிறுத்தும் போது எதிராளி நம்மிடம் சண்டை போடலாம். எனவே அவரைக் கண்டித்தோ, இனிய வார்த்தைகள் மூலம் புத்திமதி சொல்லியோ திருத்த முயற்சிக்கலாம். இப்படி செய்தும் அவர் திருந்தாவிட்டால், தவறு செய்யும் அந்த நபருடன் இனி எந்த உறவும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று விலகிப் போய் விடலாம். முதல் இரண்டையும் முடிந்தவர்கள் செய்யட்டும். முடியாதவர்கள், ஒதுங்கிப்போயாவது தவறு செய்வோரைப்புறக்கணித்து விடலாம். இவற்றில் உங்களால் முடிந்ததைச் செய்து தவறைத் தடுத்து விடுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !