உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரகசியம்.... பரம ரகசியம்!

ரகசியம்.... பரம ரகசியம்!

*உனக்குள் இருக்கும் சத்தியம் என்னும் மூலத்தைக் கண்டுபிடி. அப்போது கடவுள் சித்தமே உன்னை வழி நடத்துகிறது என்ற உண்மையைப் புரிந்து கொள்வாய். இதுவே வாழ்வில் நீ அறிய வேண்டிய ரகசியம்.
*அர்ப்பணிப்பு உணர்வுடன் உன் கடமையைச் சரிவரச் செய்து வா. நடப்பது எல்லாம் உன் நன்மைக்காகவே என்ற உண்மையை உணர ஆரம்பிப்பாய்.
*கடவுளைச் சரணடைந்து விடு. சரணடைதல் என்பது வாழ்வின் பொறுப்பை கடவுளிடம் முழுமையாக ஒப்படைப்பதாகும். அதன்பின் எல்லையற்ற மகிழ்ச்சி, நம்பிக்கை, பாதுகாப்பு உணர்வு ஆகியவற்றை நீ பெறுவாய்.
*கடவுளிடம் உங்களின் விருப்பத்தைச் சொல்லி வழிபடு. அந்த விருப்பம் நிறை வேறினாலும், நிறைவேறாவிட்டாலும் மனத்தளர்ச்சி கொள்ளாதே.
*சகிப்புத்தன்மை இல்லாவிட்டால் ஆன்மிகத் தேடலில் எதையும் சாதிக்க முடியாது. சகிப்புத்திறனே உன் லட்சியமாக இருக்க வேண்டும்.
*உன்னிடம் யாராவது முரட்டுத்தனமாக நடந்தால் அலட்டிக் கொள்ளாதே. உன் வளர்ச்சியை யாராவது சீர்குலைக்க முயன்றால் கோபம் கொள்ளாதே.
எப்போதும் அமைதியில் நிலைத்து நில்.
*தெய்வீக உணர்வு ஏற்படாதவரை மட்டுமே நீ மனிதனாக இருப்பாய். அது உன்னுள் நிலை கொண்டு விட்டால், காணும் அனைத்தும் தெய்வீக வடிவமாகவே காட்சி தரும்.
*ஆசை மனிதனைத் தன் வசப்படுத்த முயல்கிறது. பின் தன் உடைமையாகவே மாற்றி விடுகிறது. இதனால் மனிதன் எதையும் சீர் துõக்கிப் பார்க்கும் சக்தியை இழந்து விடுகிறான்.
*ஒழுக்கம் என்பது தெய்வீகமானது அல்ல. அது கடவுளைச் சார்ந்தது அல்ல. அது மனித சமுதாயத்திற்கு தேவையான அடிப்படை விஷயம்.
*தியானத்தில் அமரும் போது குழந்தையைப் போல கபடம் இல்லாமல் இரு. எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆழ்மனதில் ஒன்றி விட முயற்சி செய்.
*நீ எந்த வழியிலாவது பெரும் ஆற்றல் பெற்று விட்டால், அதன் விளைவைக் கடவுளிடம் ஒப்படைத்து விட்டு அமைதியைக் கடைபிடி.
*நோயால் வாடும் மனிதன், பயம் காரணமாக தன்னையே வருத்திக் கொள்கிறான். இன்னும் சொல்லப்போனால் பயமே நோய் உண்டாவதற்கான காரணமாக இருக்கிறது.
*கடவுள் எல்லா உயிர்களையும் ஒன்று போலவே நேசிக்கிறார். இதை உணர்ந்து விட்டவன் எல்லா உயிர்களிலும் கடவுள் குடியிருப்பதைக் கண்டு மகிழ்வான்.
*வாழ்வில் சுகத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க விரும்புகிறாய். அதே நேரத்தில் அதைப் புன்னகையுடன் கைவிடவும் ஆயத்தமாக இரு. சொல்கிறார் புதுச்சேரி மாதா அன்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !