உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகனும் பழமொழிகளும்!

முருகனும் பழமொழிகளும்!

*சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
*காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி.
*வயலூர் இருக்க அயலூர் தேவையா?
*வேலை வணங்குவதே வேலை.
*முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை; மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.
*சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)
*அப்பனைப் பாடிய வாயால் ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?
*கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.
*கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்
* பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?
*சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.
*செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?
*திருத்தணி முருகன் வழித்துணை வருவான்
*வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !