உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை கோனியம்மன் கோவிலில் கம்பம் நடுவிழா

கோவை கோனியம்மன் கோவிலில் கம்பம் நடுவிழா

கோவை: கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, மூன்று கம்பம் அமைத்து, அதற்கு தண்ணீர் ஊற்றும் வைபவம் நடந்தது. கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா வின், முக்கிய நிகழ்வான மூன்று கம்பம் அமைக்கும் வைபவம் நேற்று நடந்தது. கோவில் சிவாச்சாரியர்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க, கோவில் முகப்பில், மூன்று கம்பம் அமைக்கப்பட்டது.மூன்று கம்பத்துக்கு, சுமங்கலி மற்றும் கன்னிப்பெண்கள், தண்ணீர் ஊற்றி வழிபாடு செய்தனர். கம்பத்துக்கு, நேர்த்திக்கடனாக, உப்பு, மிளகு ஆகியவற்றை செலுத்தியும், விளக்கேற்றியும் பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !