கவுரி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :3665 days ago
சிவகங்கை: முத்துப்பட்டி கவுரி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. பிப்.,15ம் தேதி காலை 5:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக பணிகள் துவங்கின. தொடர்ந்து கும்ப அலங்காரம், முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. பிப்.,16ல் இரண்டாம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. நேற்று காலை 6:45 மணிக்கு கோபூஜை, 4ம் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக பூஜை துவங்கியது. காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். கணேச குருக்கள் பூஜை நடத்தினார்.