மகாமுனீஸ்வரன் கோவில் திருவிழா பக்தர்கள் உற்சாகம்
ADDED :3681 days ago
வால்பாறை : வால்பாறை ஸ்ரீமகாவீர முனீஸ்வரர் கோவில் திருவிழாவில், இன்று சக்திகும்பம் எடுத்து வரப்படுகிறது. வால்பாறை கக்கன்காலனி கண்திறந்த ஸ்ரீமகாமுனீஸ்வரன் கோவிலின், 16ம் ஆண்டு திருவிழா, கடந்த, 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்றிரவு, 10:00 மணிக்கு, நல்லகாத்து ஆற்றிலிருந்து சக்திகும்பம் எடுத்து வரப்படுகிறது. நாளை காலை, 6:00 மணிக்கு, அபிேஷகம், அலங்காரம், மதியம், 1:00 மணிக்கு, அன்னதாம் நடக்கின்றன.