உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தையானந்தர் அதிஷ்டானத்தில் கும்பாபிஷேகம்

குழந்தையானந்தர் அதிஷ்டானத்தில் கும்பாபிஷேகம்

மதுரை: மதுரை காளவாசல் குழந்தையானந்தர் அதிஷ்டானத்தில் நாளை காலை 6.45 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. நானுாறு ஆண்டுகளுக்கு முன் சமயநல்லுாரில் அவதரித்தவர் குழந்தையானந்தர். திரிலிங்கசுவாமி என்ற பெயருடன் விளங்கிய இவர், காசியில் சமாதியடைந்தார். யோக சக்தியால் அற்புதம் நிகழ்த்திய இவருக்கு, மதுரை காளவாசலில் 1932ல் அதிஷ்டானம் கட் டப்பட்டது. இங்கு சேஷாத்ரி சுவாமிகள் சேவா சங்கத்தினரால் திருப்பணி செய்யப்பட்டு நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !