ஆதி மாதவராய பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :3697 days ago
பவானிசாகர்: பவானிசாகர் அருகே, ஆதி மாதவராய பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
நடந்தது. பவானிசாகர் ஒன்றியம், அம்மாபாளையம்ஒர வெள்ளாளபாளையம் பிரிவில் ஆதி
மாதவராய பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
முன்னதாக காலை, 8 மணிக்கு கலச புறப்பாடு நடந்தது. இதை தொடர்ந்து கோவில்
கோபுரங்களுக்கு புனித நீர் தெளித்து, கும்பாபிஷேகம் நடந்தது. பின் சிறப்பு அலங்காரத்தில்,
பக்தர்களுக்கு பெருமாள் அருள் பாலித்தார். விழாவில் பவானிசாகர், அம்மாபாளையம்,
வெள்ளாளபாளையம், கோடேபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் கலந்து
கொண்டனர்.