எருமப்பட்டி கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :3701 days ago
எருமப்பட்டி: எருமப்பட்டி அடுத்த, அலங்காநத்தம் பகுதியில் மாரியம்மன், பகவதியம்மன், பிடாரி அம்மன் கோவில்களுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. அலங்காநத்தம் பிடாரி அம்மனுக்கு கோவில் இல்லாததால், புதியதாக கோவில் கட்டப்பட்டது. மேலும், ஏற்கனவே இருந்த மாரியம்மன், பகவதியம்மன் கோவில்கள் கடந்த, ஆறு மாதங்களாக பராமரிப்பு செய்யப்பட்டு, கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. அதன்படி, கிராம சாந்தி அழைத்து, நேற்று முன்தினம் காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. அதைத் தொடர்ந்து, யாக பூஜைகள் மற்றும் வேள்விகள் மூலம் யந்திர பிரதிஷ்டை அஷ்டபந்தனம் சாற்றப்பட்டது. அதிகாலை, 4 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகள் துவங்கியது. காலை, 7 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு, கும்பாபிஷேக விழா நடந்தது.