தாடக நாச்சிஅம்மன் கோவிலில் மார்ச் 1ல் திருக்கல்யாணம்
ADDED :3669 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி குஞ்சிபாளையம் தாடக நாச்சி அம்மன் கோவிலில், 31ம் ஆண்டு
திருவிழாவில், வரும் 1ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது.
இக்கோவிலில், 31ம் ஆண்டு திருவிழா கடந்த 16ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன்
துவங்கியது. இன்று காலை, 7:00 மணிக்கு நல்லுாத்து தீர்த்தம் எடுத்துச் செல்லுதல், 28ம் தேதி
இரவு, 7:00 மணிக்கு தெய்வகுள தீர்த்தம் எடுக்க செல்லுதல் இடம் பெறு கிறது. மார்ச் 1ம் தேதி
காலை, 7:00 மணிக்கு கூடுதுறை தீர்த் தம் எடுக்க செல்லுதல், மாலை 6:00 மணிக்கு
திருக்கல்யாண உற்வசம், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வரும் 2ம் தேதி காலை மாவிளக்கு பூஜை, கிடாய் வெட்டுதல், 4ம் தேதி மஞ்சள் நீராடுதல், அபிேஷகம், தீபாராதனை மற்றும் அன்னதானம் நிகழ்ச்சியும் நடக்கின்றன.