உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி உற்சவம்

வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி உற்சவம்

புதுச்சேரி: புதுச்சேரி வைத்திக்குப் பம் கடற்கரையில் நேற்று நடந்த மாசிமக தீர்த்தவாரியில்,
ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

புதுச்சேரி வைத்திக்குப் பம் கடற்கரையில், மாசிமக தீர்த்தவாரி நேற்று நடந்தது. தீவனுார் சுயம்பு பொய்யாமொழி விநாயகர், செஞ்சி ரங்கநாதர், மயிலம் சுப்ரமணியர், மேல்மலையனுார் அங்காளம்மன், தீவனுார் லட்சுமிநாராயண பெருமாள், கூட்டேரிப்பட்டு பள்ளிகொண்ட பெருமாள், சிங்கிரிகோவில் லட்சுமி நரசிம்ம பெருமாள் உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருள செய்தனர். இதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்தும், புதுச்சேரி மற்றும் சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த தென்கலை வரதராஜபெருமாள், துளுக்காநத்தம்மன், அங்காளம்மன், முத்தாலம்மன் என நுாற்றுக்கும் மேற்பட்ட சாமிகள், தீர்த்தவாரியில் எழுந்தருளின. கடற்கரையில் எழுந்தருளிய சுவாமிகள் தீர்த்தவாரி முடிந்து, பக்தர்களின் தரிசனத்திற்காக கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன. புதுச்சேரி, கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், தரிசனம் செய்த னர். கடலில் புனித நீராடினர்.

பள்ளிகள் விடுமுறை: மாசிமக உற்சவத்தை முன்னிட்டு புதுச்சேரி யில் அனைத்துப் பள்ளி
களுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. அண்ணா சாலை, காமராஜர் சாலை, புஸ்சி வீதி, காந்தி சாலை, எஸ்.வி.பட்டேல் சாலை, கடற்கரை செல்லும் பகுதிகளில் ஆங்காங்கே பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார் பில், மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பாதுகாப்பு ஏற்பாடு:
தீயணைப்புத் துறையினர், சுகாதார அலுவலர்கள் முதலுதவி மையங்களை அமைத்திருந்தனர். உயரமான கட்டடங்களில் இருந்து பைனாகுலர் மூலம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். சி.சி.டி.வி. கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !