விருத்தாசலத்தில் மாசி மக தெப்பல் உற்சவம்
ADDED :3651 days ago
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மாசி மக தெப்பல் உற்சவம் நேற்று நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நகராட்சி சார்பில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப விமானத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகர் சுவாமிகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடந்தது. அதிகாலை 3:30 மணி முதல் 5:30 மணிவரை புதுப்பேட்டை அம்மன் குளத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகர் ஏழுந்தருளி தெப்பல் உற்சவம் நடந்தது. பின்னர், பாலக்கரையிலிருந்து மார்க்கெட் கமிட்டி வரை சுவாமி ஊர்வலம் நடந்தது. தெப்ப உற்சவத்தில் நகராட்சித் தலைவர் அருளழகன், செயல் அலுவலர் கொளஞ்சி உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.