மூலநாதர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
ADDED :3848 days ago
பாகூர்: மூலநாதர் சுவாமி கோவிலில், மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, நாளை 26ம் தேதி, பால விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. புதுச்சேரியில் உள்ள பாகூரில், 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த, மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, நாளை 26ம் தேதி, பால விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. காலை 9:00 மணிக்கு, வேதாம்பிகை, மூலநாதர், முருகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்டோருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, இரவு 8:00 மணிக்கு, கோவில் கோபுர மண்டபத்தின் வெளிப்புற சுவரில், தெற்கு திசை பார்த்து அருள்பாலிக்கும் பால விநாயகருக்கு, தேன் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் அர்ச்சகர்கள் செய்துள்ளனர்.