ராமேஸ்வரம் கோயில் ஆஞ்சநேயர்சன்னதியில் ஏசி வசதி!
ADDED :5263 days ago
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் ஆஞ்சநேயர் சன்னதியில் "ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கிழக்கு நுழைவு வாயில் உள்ள பாஸ்கர சேதுபதி மண்டபத்தில், ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. சீதாதேவியால் கடற்கரை மணலில் லிங்கம் பிடித்து, பூஜை செய்தபிறகு அனுமனால் பூஜிக்கப்பட்ட அனுமலிங்கம் ஆஞ்சநேயர் சன்னதியின் இடது புறத்தில் அமைந்துள்ளது. ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் முடிந்தவுடன், கடைசியாக அனுமனை தரிசித்து செல்வது வழக்கம். குறுகலான இடம், காற்றோட்டம் இல்லாததால் புழுக்கத்தில் பக்தர்கள் சிரமப்பட்டனர். இதை தவிர்க்க, பக்தர் ஒருவரின் உபயத்தில் ஆஞ்சநேயர் சன்னதியில் "ஏசி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு "ஏசி பொருத்தப்படவுள்ளது. இப்பணி முடிந்தவுடன், தரைத்தளத்தில் டைல்ஸ் பதிக்கப்பட உள்ளது.