ரமலான் சிந்தனைகள்: வாங்கிய கடனை அடையுங்க!
கடன் வாங்குவது தவிர்க்க முடியாத விஷயம். இன்று கல்வி, வீடு கட்டுதல் போன்ற அத்தியாவசியக் கடன்களை வங்கியில் பெறுகிறோம். சில நேரங்களில், தவிர்க்க முடியாமல் தனி நபர்கள்இடமும் கடன் பெறுகிறோம். அப்படி கடன் வாங்கியிருந்தால், அதை உரிய காலத்தில் திருப்பிக் கட்டி விட வேண்டும். இல்லாவிட்டால், கடன்காரன் திட்டத்தான் செய்வான். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்விலும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. நாயகம்(ஸல்) அவர்கள் ஒரு வணிகரிடம் கடன் வாங்கியிருந்தார்கள். ஆனால், திருப்பிச் செலுத்தவில்லை. ஒருநாள் தன் தோழர் உமருடன் அவர் தெருவில் நடந்து கொண்டிருந்த போது, அந்த வணிகர் அவரைப் பார்த்து கடனைக் கேட்டார். உமருக்கு கோபம் வந்துவிட்டது. வணிகரை அடிக்கப் பாய்ந்து விட்டார். நாயகம்(ஸல்) அவர்கள் அவரைத் தடுத்தார்கள்.
""தோழரே! தாங்கள் செய்வது சரியல்ல! கொடுத்த கடனை அவர் திருப்பிக் கேட்கிறார். நான் அவருக்கு கொடுக்காமல் இருந்ததற்காக என்னைத்தான் நீர் கண்டித்திருக்க வேண்டும், என்றார்கள்.இந்த பதிலை சற்றும் எதிர்பாராத வணிகர், அண்ணலாரிடம் மன்னிப்பு கேட்டார். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்திவிட வேண்டும்என்பதில் அண்ணலார் உறுதியாக இருந்தார்கள். கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல்இருப்பவர்கள் உடனடியாக திருப்பிச் செலுத்தி விடுவது பற்றி சிந்தியுங்கள்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.42 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.33 மணி.